மைத்ரேயன் இணைப்பு குறித்து அண்ணாமலை!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக முன்னாள் எம்பி பாஜகவில் இணைந்துள்ளது கட்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இன்று அதிமுகவின் முன்னாள் எம்பியும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மைத்ரேயன் திடீரென பாஜகவில் இணைந்து கொண்டார். அவர் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் இணைந்து கொண்டதையடுத்து அவரை பாஜகவின் முன்னணி தலைவர்கள் வரவேற்றனர். அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தது குறித்து அண்ணாமலை, “பிரதமர் நரேந்திரமோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் கரத்தினை வலுப்படுத்த, பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி முன்னிலையில் நமது கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயனை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். டாக்டர். மைத்ரேயனின் அரசியல் அனுபவமும், தொடர்ந்த மக்கள் பணியும், தமிழக பாஜகவிற்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.