மொபைலை விழுங்கிய கைதி கவலைக்கிடம்!

Filed under: Uncategory |

கைதி ஒருவர் பீகார் மாநிலத்தில் சிறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தபோது மொபைல் போன் வைத்திருந்ததை கண்டுபிடித்ததால் அந்த போனை அவர் முழுங்கி விட்டதால் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்திலுள்ள கோபல்கஞ்ச் சிறையில் கைதிகள் மத்தியில் மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தது அடுத்து சிறை உயர் அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். அப்போது கைசர் அலி என்ற கைதி மொபைல் போன் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அவர் திடீரென மொபைலை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அந்த கைதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது வயிற்றில் மொபைல் போன் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.