மோகன்லாலின் திரைப்பட ஷூட்டிங் நிறைவு?

Filed under: சினிமா |

முதன் முதலாக மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலை மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான லிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரி இயக்கும் திரைப்படம் “மலைக்கோட்டை வாலிபன்.” திரைப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி, அவர்களிடம் மோகன்லால் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது.

ஆனால் கமல்ஹாசன் “இந்தியன் 2” திரைப்பட வேலைகளைக் காரணம் காட்டி அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்றும், ரிஷப் ஷெட்டியும், தனது அடுத்த பட வேலைகளைக் காரணம் காட்டி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 130 நாட்கள் நடந்து தற்போது முடிந்துள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்ட கதையான இதில் மோகன்லால், மல்யுத்த வீரராக நடித்துள்ளார். ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் விரைவில் இப்படத்தின் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த மல்யுத்த வீரரான காமா என்கிற குலாம் முகமது பக்ஷ் என்பவரின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை திரைப்படத்தின் தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.