மோடியின் டிவிட்டர் கணக்கு – பாலோயர்ஸ்களில் 60 சதவீதம் பேர் போலி!
பிரதமர் மோடியின் டிவிட்டர் அக்கவுண்ட்டை பாலோ செய்பவர்களில் 60 சதவீதம் பேர் போலியானவர்கள் என ஆய்வுமுடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்திய பிரதமரான நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்குபவர். தன்னுடைய் கருத்துகளை டிவிட்டர் மூலமாக அவ்வப்போது தெரிவித்து வரும் அவருக்கு 4 கோடிக்கும் அதிகமாக பாலோயரஸ் இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகமாக பாலோயர்ஸ் கொண்ட பிரபலம் மோடிதான். இந்நிலையில் டிவிப்ளோமசி என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் அவரது கணக்கைப் பின் தொடர்பவர்களில் 60 சதவீதத்துக்கும் மேலானவர்கள் போலி கணக்கு வைத்திருப்பவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
டிவிப்ளோமசி ,உலக தலைவர்களின் கணக்குகளை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சியில் இதுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு டிவிட்டர் அல்காரிதம், சம்மந்தப்பட்ட நபர் கடைசியாக பதிவு செய்த டிவிட் மற்றும் அவர்கள் வேறு யார் யாரை பாலோ செய்கிறார்கள் போன்றவற்றை வைத்து முடிவு வெளியிட்டுள்ளது. இது மாதிரியான போலி பாலோயர்கள் மோடிக்கு மட்டுமல்லாமல் உலக தலைவர்களான ட்ரம்ப், போப், ராகு காந்தி ஆகியோருக்கும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.