மத்திய இணையமைச்சர் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயண செலவு ரூ.22.76 கோடி என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை 21 முறை பிரதமர் மோடி வெளி நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமர் மோடி வெளி நாடு பயணம் செய்தது பற்றியும் அதற்காக செலவு பற்றியும் மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி 21 வெளி நாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். இந்தற்காக ரூ.22.76 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இப்பயணத்தில், பிரதமர் மோடி 3 முறை ஜப்பான், அமெரிக்கா, மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இரண்டு முறை பயணம் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களின் வெளி நாட்டுப் பயணத்திற்கு ரூ.6,24,31,424 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.