மோடியை புகழ்ந்த குலாம் நபி ஆசாத்!

Filed under: அரசியல் |

காங்கிரஸ் கட்சியின் மூரத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராகுல்காந்திதான் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.

தற்போது அவர் பிரதமர் மோடியை மனிதநேயமிக்க தலைவராக திகழ்கிறார் என பாராட்டியுள்ளார். இதுவரை மோடியை முரட்டுத்தனமான மனிதர் என நான் தவறாக நினைத்துவிட்டேன். தனிப்பட்ட முறையில் ராகுல்மீது எந்தவெறுப்பும் இல்லை. அடுத்து குலாம் நபி தனி கட்சி துவங்குவாரா? அல்லது பாஜகவில் இணைவாரா என எதிர்பார்க்கப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி மீது எனக்கு இருந்த மரியாதை, ராகுல் காந்தி மீதான மரியாதை, இந்திரா காந்தியின் குடும்பத்தினருக்கு உரியது. தனிப்பட்ட முறையில் அவரது நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன். அவரை (ராகுல் காந்தியை) வெற்றிகரமான தலைவராக உருவாக்க முயற்சித்தோம். அவருக்கு ஆர்வம் இல்லை. பிரதமர் மோடி ஒரு மோசமான மனிதர் என்று நான் நினைத்தேன், ஆனால் அவர் மனிதாபிமானத்தை காட்டினார். மோடியிடம் சிக்கியது நான் அல்ல, அவர்தான். இன்று என்னுடைய சொந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். பாஜகவில் சேரமாட்டேன், எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.