‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ டிரெயிலர் ரிலீஸ்!

Filed under: சினிமா |

விஜய் சேதுபதி தொடர்ந்து தோல்வி படங்களாக நடித்து வந்தார். ஆனால், “விடுதலை” வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் ஏறுமுகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர் நடிப்பில் சில ஆண்டுகளாக ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்த ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் மே 12ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் உருவாகிய படம் “யாதும் ஊரே யாவரும் கேளீர்.” இப்படத்தில் மேகா ஆகாஷ் ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி இலங்கையில் இருந்து வந்து வாய்ப்புகளை தேடும் இசைக்கலைஞராக நடித்துள்ளார். இந்த படம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்தாலும் பல காரணங்களால் ரிலீசாகா£மல் முடங்கிக் கிடந்தது. விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் இப்போது இப்படத்தின் டிரெயிலர் ரிலீசாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.