யாத்திரையின்போது மூத்த தலைவர் திடீர் மரணம்!

Filed under: அரசியல் |

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் போது திடீரென மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒற்றுமை பாதயாத்திரை நடத்தி வருகிறார். இந்த பாதயாத்திரையின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணகுமார் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவர் அவரை பரிசோதனை செய்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து பாதை யாத்திரை சென்றவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் ஒற்றுமை பாதயாத்திரையில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணகுமார் மரணமடைந்த தகவல் கேட்டு ராகுல்காந்தி அவருக்கு இரங்கல் தெரிவித்தார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.