“யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது!”

Filed under: சினிமா |

“கேஜிஎப் 2” படத்தின் கதாநாயகன் அளித்துள்ள பேட்டியில், “யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது” என கூறியுள்ளார்.

“கேஜிஎப் 2” திரைப்படத்தின் புரமோஷனுக்காக யாஷ் சென்னை வந்திருக்கிறார். வரும் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் நிருபர்களை சந்தித்துள்ளார்.
அப்போது “கர்நாடக மாநிலத்தில் தமிழ் உள்பட பிற மாநில திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்கிறது” என்ற கேள்விக்கு பதிலளித்த யாஷ், “யாரையும் யாரும் கட்டுப்படுத்த முடியாது” என்றும் தமிழ்நாட்டில் வெளியாகும் கன்னட படங்களை ரசிகர்கள் கொண்டாடுவது போல் அங்கு உள்ள ரசிகர்களும் தமிழ் படங்களை கொண்டாடுகின்றனர்” என்றும் கூறினார்.
யாஷ் நடித்த ‘கேஜிஎப் 2 திரைப்படம் விஜய் நடிக்கும் “பீஸ்ட்” படத்துடன் போட்டியாக களத்துடன் இறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.