14 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் படத்தை இயக்கப்போறிகிறாரா சிம்பு – கசியும் தகவல்!

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, தற்போது சிறப்பான முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவருக்குள் பல திறமைகள் இருக்கிறது. இவர் படங்களை இயக்கவும், படத்திற்கு இசையமைக்கும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் பல அவதாரங்களை எடுத்து இருக்கிறார்.

தற்போது இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனால் இந்த படம் எப்போது வெளியாகும் என சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சிம்பு மீண்டும் படத்தை இயக்கப்போகிறார் என பல தகவல்கள் கசிந்து வருகிறது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

இதற்கு முன்பே சிம்பு மன்மதன், வல்லவன் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். அந்த படங்களுக்கும் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.