யூடியூபில் 250மில்லியனை தொட்டது அரபிக்குத்து பாடல்!

Filed under: சினிமா |

யுடியூபில் 250 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது “பீஸ்ட்” திரைப்படத்தின் “அரபிக்குத்து” பாடல்.
விஜய்யின் “பீஸ்ட்” படத்தின் முதல் சிங்கிள் பாடலான “அரபிக்குத்து” பாடல் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “அரபிக்குத்து” பாட்டு ஒன்று பிப்ரவரி 14ம் தேதி வெளியாகி “பேன் இந்தியா” ஹிட்டாகியுள்ளது.


இந்த பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் முதல் திரை உலகினர் வரை இந்த பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டு வந்தனர். “அரபிக்குத்து” பாடலுக்கு பிறகு “ஜாலியோ ஜிம்கானா” என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனாலும் “அரபிக்குத்து” பாடல் தொடர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த பாடல் 250 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.