துக்ளக் தர்பார் படத்தின் சிங்கிள் டிராக் “அண்ணாத்த சேதி” வெளியீடு!

Filed under: சினிமா |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விஜய்சேதுபதி. இவர் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் துக்ளக் தர்பார். இந்த படத்தில் அவர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடத்தி இருக்கிறார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்த படத்தின் இயக்குனர் தீனதயாளன். கதாநாயகியாக அதிதி ராவ் ஹைத்ரி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், மஞ்சிமா மோகன் போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சமீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் “அண்ணாத்த சேதி: என்ற பாடல் வெளியாகி உள்ளது. அந்தப் பாடல் இதோ: