ரஜினிகாந்த், மம்தா, தமிழிசை சந்திப்பு நடக்குமா?

Filed under: அரசியல்,சினிமா,சென்னை |

இன்று சென்னை கோடம்பாக்கத்தில் மேற்கு வங்க கவர்னர் இல கணேசனின் சகோதரரின் 80வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் மூவரும் சந்திப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்தார். இந்நிலையில் இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. மூன்று வெவ்வேறு துருவங்களான இவர்கள் மூவரும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் மூவரும் சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு நிகழ்வு நடக்குமா என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துள்ளனர். என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.