ரஜினியுடன் நடித்ததால் மார்க்கெட் இழந்ததாக நடிகை குற்றச்சாட்டு!

Filed under: சினிமா |

நடிகை மனீஷா கொய்ராலா “பாபா” திரைப்பபடம் பாக்ஸ் ஆபிசில் தோல்வியடைந்த பின் தனக்கான பட வாய்ப்புகள் குறைந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் 90களில் முன்னணியாக இருந்தவர் மனீஷா கொய்ராலா. இவர், ஷங்கர் இயக்கத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்த “இந்தியன் -1” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. கமலுடன் இணைந்து “ஆளவந்தான்,” ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக “முதல்வன்,” மணிரத்னம் இயக்கத்தில் “பம்பாய்,” சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “பாபா” உட்பட பல படங்களில் நடித்தார். பாலிவுட் படங்களில் நடித்தது போன்றே அவருக்கு தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு இருந்தது. கடந்த 2002ம் ஆண்டு சுரேஷ் கிருஸ்ணா இயக்கத்தில், ரஜினியுடன் நடித்த “பாபா” படத்தில் நடித்த பிறகு தென்னிந்தியாவில் தன் மார்க்கெட் முடிவுக்கு வந்ததாக மனீஷா கொய்ராலா கூறியுள்ளார். இதுகுறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “பாபா திரைப்படத்தில் நடிக்கும் முன், தென்னிந்தியாவில், தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் பிஸியாக இருந்தேன். “பாபா” படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தபின் பட வாய்ப்புகள் குறைந்தது” என்று கூறியுள்ளார்.