ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி!

Filed under: இந்தியா |

பிரதமர் மோடி பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு முக்கிய பதவி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவியபோது பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் என்ற அமைப்பை அறிவித்தார். பிஎம் கேர்ஸ் அமைப்பின் மூன்று உறுப்பினர்களை அவர் நியமனம் செய்துள்ளார். அதில் ஒருவர் டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டா என்பது குறிப்பிடத்தக்கது. சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் முன்னாள் துணை சபாநாயகர் கரிய முண்டா மற்றும் தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகிய மூவரும் பிஎம் கேர்ஸ் நிதியின் புதிய அறங்காவலர்களாக நியமிக்கப்படவுள்ளனர். இதையடுத்து ரத்தன் டாட்டா பிரதமர் மோடியை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.