ரயில் விபத்து குறித்து நடிகை பிரியா ஆனந்த்!

Filed under: இந்தியா,சினிமா,தமிழகம் |

நடிகை பிரியா ஆனந்த் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ள ரயில் விபத்து குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. இதையடுத்து அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 300 பேர் பலியாகியுள்ளனர். இதில் 1,200 பயணிகளுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் உயிர்தப்பியுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அவ்வகையில் நடிகை பிரியா ஆனந்த், “இது ஏற்றுக் கொள்ள முடியாத அலட்சியம்” என கோபமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.