ரவிதேஜாவின் ‘தமாகா’ படம் ஹிட்!

Filed under: சினிமா |

நடிகர் ரவிதேஜா தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என அழைக்கப்படுபவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் ஹிட்டாகியுள்ளன. பல திரைப்படங்கள் தமிழிலும் ரீமேக்காகி வெற்றி பெற்றுள்ளன. ரவி தேஜாவின் மார்க்கெட்டில் உச்சம் தொட்ட படம், “கிக்.” இப்படம் தமிழில் “தில்லாலங்கடி” என்ற பெயரில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது.

கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாக கொடுத்து வந்த ரவி தேஜா, சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீசான “தமாகா” திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். 40 கோடி ரூபாய் செலவில் உருவாகி வெளியான இப்படம் முதல் 3 நாட்களிலேயே 32 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதையடுத்து இப்போது 10 நாளில் 90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். விரைவில் இத்திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணையும் என கூறப்படுகிறது.