ரஷிய பிரதிநிதியை தாக்கிய உக்ரைன் எம்.பி.,

Filed under: உலகம் |

உக்ரைன் எம்.பி. அலெக்சாண்டர் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற மாநாட்டில் ரஷ்ய பிரதிநிதியை, தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய நாடு கடந்த ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் மரணமடைந்துள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளும், அமெரிக்காவும் ஆயுதம் மற்றும் பொருளாதார உதவி செய்து வருகின்றன இதனால், உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் அதிபர் புதினை கொல்ல உக்ரைன் டிரோன் அனுப்பியது. இதற்கு ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது. துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற மாநாட்டின் உக்ரைன் எம்பி ஒலெக்சாண்டர் மரிகோவ்ஸ்கி ரஷ்யா பிரதிநிதியை தாக்கினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.