ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் கனிமொழி!

Filed under: அரசியல்,இந்தியா |

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த ஒற்றுமை பயணம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலிவுட் பிரபலங்கள் முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவ்வகையில் தற்போது திமுக எம்பி கனிமொழி இப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் ராகுல் காந்தியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் உள்ளிட்ட பல புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது. இந்திய ஒற்றுமை பயணம் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.