ராகுல் காந்தியின் திட்டம்!

Filed under: அரசியல்,இந்தியா |

ராகுல் காந்தி இந்தியா கூட்டணி சார்பில் பொது தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகின்றன. ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடும் கட்சி கூட தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியின் சார்பில் ஒரு பொது தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் ராகுல் காந்தி இது குறித்து இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இத்தேர்தல் அறிக்கை இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் இத்தேர்தல் அறிக்கையில் பல வித்தியாசமான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் மிக உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் பாஜகவுக்கு சார்பாக கருத்துக்கணிப்புகள் இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து ஒரே தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை சந்தித்தால் நிச்சயமாக வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக ராகுல் காந்தி வருவதாக கருதுவதாக கூறப்படுகிறது.