ராகுல் காந்தி பாதயாத்திரை!

Filed under: அரசியல் |

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரையாக செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து பாதயாத்திரையை தொடங்குவதாகவும் 148 நாட்கள் நடக்கும் இந்த பாதயாத்திரை காஷ்மீரில் முடிக்க உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். இப்பாதையில் ஆங்காங்கே இருக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென்றும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.