ராகுல் காந்தி லண்டன் பேச்சுக்கு விளக்கம்!

Filed under: அரசியல்,இந்தியா |

தற்போது டில்லியில் நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நான்கு நாட்களாக எம்பிக்கள் அமளியால் எந்த நடவடிக்கையும் ஏற்படவில்லை.

லண்டனில் ராகுல் காந்தி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பாஜக உறுப்பினர்களும் அதானி குழும விவகாரம் குறித்து விசாரணை குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோஷமிட்டு வருவதால் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு மசோதாக்களும் நிறைவேற்றப்படவில்லை. இன்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். லண்டன் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம், “இந்தியாவுக்கு எதிராக தான் எதுவும் பேசவில்லை. எனக்கு அனுமதி தந்தால் நாடாளுமன்றத்தில் இது குறித்து விளக்கம் அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.