ராஜமவுலியின் படத்தின் கதாநாயகி ஆகிறார் தீபிகா படுகோன்!

Filed under: சினிமா |

நடிகை தீபிகா படுகோன் இயக்குனர் ராஜமவுலியின் திரைப்படத்தில் கதாநாயக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ராஜமவுலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருக்கின்றனர். இப்படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமையும் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.