ராணுவ உடையில் ராமராஜன்!

Filed under: சினிமா |

“சாமானியன்” திரைப்படத்தில் நடிகர் ராமராஜன் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ராணுவ உடையில் ராமராஜன் போஸ்டர் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக 80களின் இறுதியிலும் 90களின் தொடக்கத்திலும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்தவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வியடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார்.

அதிமுகவில் தீவிரமாக இயங்கியவர் அதன்பின் அரசியலிலிருந்தும் விலகினார். இப்போது ஓய்வில் இருக்கும் ராமராஜன் குணச்சித்திர வேடங்கள் தனக்கு வந்தாலும் நடிக்க மறுத்து வந்தார். நடித்தால் ஹீரோவாகதான் நடிப்பேன் என்ற உறுதியோடு இருந்தார். “மேதை” திரைப்படத்துக்குப் பிறகு தற்போது மீண்டும் பெரிய திரையில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய ரஹேஷ் இயக்கவுள்ளார். படத்தில் ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் மற்ற முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனராம். இத்திரைப்படத்துக்கு “சாமான்யன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று ராமராஜனின் பிறந்தநாளை முன்னிட்டு ராணுவ உடையில் ராமராஜன் தோன்றும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.