ராம்சரண் படத்தில் “சீதாராமம்” கதாநாயகியா?

Filed under: சினிமா |

நடிகர் ராம்சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது, அவர் ஷங்கர் இயக்கத்தில் “கேம்சேஞ்சர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் “வாரிசு” படத்தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரித்து வருகிறார்.

“உப்பென்னா” திரைப்படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை தற்போது ஸிசி16 என அழைத்து வருகின்றனர். படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக நடிக்க “சீதாராமம்” புகழ் மிருனாள் தாக்கூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்பட்டது.