‘ராம்சேது’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

“ராம் சேது” திரைப்படத்தில் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் மற்றும் இலங்கைக்கு இடையேவுள்ள “ராம் சேது” என்ற பாலம் ராமரால் கட்டப்பட்டது என்று நம்பப்படும் நிலையில் அதை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. புராணத்தில் கூறப்படும் இந்த கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் நவீன காலத்தில் எடுக்கப்பட்ட கதையம்சம் போல் உள்ளது. அக்ஷய்குமார் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படம் அக்டோபர் 25ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.