ரிஷி தவானின் வித்தியாசமான மாஸ்க்!

Filed under: விளையாட்டு |

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ரிஷி தவான் 4 ஓவர்கள் பந்துவீசி 39 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி ஓவரை சிறப்பாக வீசி வெற்றியைத் தக்கவைத்தார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் மீண்டும் தோற்று சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது சி.எஸ்.கே. அணி. இந்த போட்டியிலும் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்ல கடைசி ஓவரில் தோனியின் விக்கெட்டைக் கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிஷி தவான்.

நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் பந்துவீசும்போது முகத்துக்கு வித்தியாசமான மாஸ்க் ஒன்றை அணிந்து பந்துவீசினார். அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது ஏன் என்றால் அவர் சமீபத்தில் மூக்கு சம்மந்தமான அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், அதனால் அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த மாஸ்க்கை அணிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.