தோனிக்கு விநோத பிறந்த நாள் பரிசு!

Filed under: விளையாட்டு |

எம்.எஸ்.தோனியின் பிறந்த நாளான இன்று அதை கொண்டாடும் விதமாக வீடு ஒன்றை ரசிகர் தயார் செய்துள்ளார்.


எம்.எஸ்.தோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர். அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணியை பல்வேறு சாதனைகள் படைக்க செய்தவர். தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் ஆரம்பம் முதலே சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு தமிழகத்தில் அதிகமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இன்று தோனி பிறந்தநாளில் பலரும் டுவிட்டரில் வாழ்த்துகளையும், ஹேஷ்டேகுகளையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்ற இளைஞர் தோனியின் பிறந்தநாளையொட்டி தோனி இந்திய ராணுவ உடையில் இருக்கும் படத்தை அவரது வீட்டு சுவற்றில் வரைந்து ஹேப்பி பர்த்டே தோனி என்றும் எழுதியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தோனியின் தீவிர ரசிகரான கோபிகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோனியை போற்றும் விதமாக தனது வீட்டையே சிஎஸ்கேவின் மஞ்சள் நிறத்தில் தயார் செய்து டிரெண்டானவர் என்பது குறிப்பிடத்தக்கது.