ரூ.500 கோடி வசூல்!

Filed under: சினிமா |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “விக்ரம்” ரூ.500 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

இத்திரைப்படத்தில் உலகநாயகனுடன் விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா என முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர். ரூ.140 கோடியில் எடுக்கப்பட்ட படம் கடந்த வாரம் ரூ.450 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தைப் பார்த்த சினிமா நட்சத்திரங்கள், சினிமா விமர்சகர்கள் உட்பட பலரும் இப்படத்தை கொண்டாடினர். இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள “விக்ரம்” படம் தொடர்ந்து இன்று 75வது நாளாக தியேட்டர்களில் ஓடி வசூலை குவித்துள்ளது. தமிழ் படங்களில் அதிக வசூலீட்டிய படங்களில் முதலிடத்தில் உள்ள கமலின் “விக்ரம்” படம் இன்று 75வது நாளில் மொத்தம் ரூ.500 கோடி வசூலை குவித்துள்ளது.