‘லத்தி’ பட டீசர்!

Filed under: சினிமா |

‘லத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுகிறது.

நடிகர் விஷால் நடிப்பில், வினோத் குமார் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள படம் “லத்தி”. இப்படத்தில் விஷாலின் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது. ஒரு நிமிடத்திற்கு மேல் இந்த டீசரில் விஷால் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். படத்தின் டீசர் ஆரம்பிக்கும் முன்பு சிவாஜிகணேசன், எம்ஜிஆர், கமல், ரஜினி, விஜயகாந்த், விக்ரம், அஜித், விஜய் உட்பட பல முக்கிய நடிகர்கள் காக்கிச் சட்டையுடன் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன