லலித் மோடி ஆவேசம்!

Filed under: அரசியல்,இந்தியா |

நீரவ் மோடி ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் வழக்கு போட போகிறேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசியபோது மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுத்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்துள்ளார். பொருளாதார குற்றம் செய்துவிட்டு இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற நீரவ்மோடி, ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்தில் வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் கடந்த 10 ஆண்டுகள் மேலாக வசித்து வரும் லலித் மோடி ராகுல் காந்திக்கு எதிராக ஆவேசமாக தனது டுவிட்டரில், “நீதிக்கு பயந்து தப்பி ஓடி விட்டதாக ராகுல் காந்தியும் அவரது கூட்டாளிகள் சிலரும் மீண்டும் மீண்டும் சொல்வதை நான் பார்த்து வருகிறேன் எனக்கு எதிராக எப்போது குற்றச்சாட்டு நிறுவனம் ஆகி இருக்கிறது? ஊழல் மற்றும் நிதி மோசடிகள் தன்னை தொடர்பு படுத்தி பேசியதற்காக ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.