“லியோ” படத்திற்கு கேரளா தியேட்டர்களின் எண்ணிக்கை?

Filed under: இந்தியா,சினிமா |

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை அக்டோபர் 19ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர். இப்போது “லியோ” படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்தின் ரிலீஸ் பற்றிய ஆச்சர்ய தகவல் வெளியாகியுள்ளது. படம் கேரளாவில் சுமார் 650 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தளவு அதிக எண்ணிக்கையில் கேரள சூப்பர் ஸ்டார்களின் படங்கள் கூட ரிலீசாகாது என்பது குறிப்பிடத்தக்கது.