“லெஜண்ட்” திரைப்படம் சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Filed under: சினிமா |

“தி லெஜண்ட்” திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அண்ணாச்சி சரவணன் நடித்துள்ளார். இப்படத்தின் “வாடிவாசல்” என்ற பாடல் வெளியாகி உள்ளது.

இப்பாடலில் சரவணன் மற்றும் ராய் லட்சுமி ஆகிய இருவரும் திருவிழா நடக்கும் இடத்தில் குத்தாட்டம் ஆடுவது போன்று காட்சிகள் உள்ளன. மிகவும் வண்ணமயமாக ஏராளமான பொருட்செலவில் திருவிழாக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்பாடலை ஜொனிதா காந்தி மற்றும் பென்னி தியோல் பாடி உள்ளனர். சினேகன் இப்பாடலை எழுதியுள்ளார்.