லேடி சூப்பர் ஸ்டார் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்

Filed under: சினிமா |

நயன்தாரா நடிக்கும் படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அவர் “ஓ2” என்ற திரைப்படம் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இத்திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டைட்டில் வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
இந்த படத்தை ஜிகே விஷ்ணு என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.