வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி?

Filed under: Uncategory |

சென்னை, செப் 23:

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Indian people run for shelter following a cyclone warning at the Bay of Bengal coast in Gopalpur beach in Ganjam district about 200 kilometers (125 miles) from the eastern Indian city Bhubaneswar, India, Saturday, Oct. 12, 2013. Hundreds of thousands of people living along India’s eastern coastline were taking shelter Saturday from a massive, powerful cyclone Phailin that was set to reach land packing destructive winds and heavy rains. (AP Photo/Biswaranjan Rout)

கடந்த சில நாட்களாக, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக, சென்னை உட்பட, 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.