வங்கி கணக்குகளில் கோடியில் வரவு!

Filed under: சென்னை |

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் தவறுதலாக ரூ.13 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள எச்டிஎப்சி வங்கியின் கிளையின் 100 வாடிக்கையாளர்களின் கணக்கில் திடீரென தவறுதலாக ரூ.13கோடி ரூபாய் வரவாக வைக்கப்பட்டு உள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தவறை கண்டறித்த வங்கி கிளை உடனடியாக சம்பந்தபட்ட வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் வங்கி கணக்குகளில் வரவானதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.