வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி!

Filed under: தமிழகம் |

சென்னை வானிலை ஆய்வு மையம் நாளை வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாவதால் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி நோக்கி நகரக் கூடும் என்பதால் சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கள்ளக்குறிச்சி கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழக கடலோர பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.