வடமாநிலத்தவர்களுக்கு டிஜிபி உத்தரவு!

Filed under: சென்னை,தமிழகம் |

டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குல்பி, பானிப்பூரி விற்பவர்கள் மற்றும் இன்னபிற வேலையில் ஈடுபடுபவர்கள் உட்பட அனைவரும் தங்களது பேர் மற்ற விவரங்களை காவல்நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, மயிலாப்பூரில் தொழிலதிபர் கொலையில் வடமாநிலத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், தமிழக மக்களின் பாதுகாப்பிற்காக டிஜிபி சைலேந்திரபாபு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.