வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த திரிஷா!

Filed under: சினிமா |

காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து நடிகை திரிஷா திரும்பிவிட்டதாகவும், அவர் “லியோ” திரைப்படத்தை விட்டு விலகியதாகவும், காஷ்மீர் குளிர் அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பது போன்ற பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

நேற்று திரிஷாவின் அம்மா “லியோ” திரைப்பட படப்பிடிப்பில்தான் திரிஷா இருக்கிறார், அவர் இன்னும் சென்னை திரும்ப வில்லை” என்று விளக்கமளித்துள்ளார். காஷ்மீரில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு தான் “காஷ்மீரில் தான் இருக்கிறேன்” என்பதை திரிஷா உறுதி செய்துள்ளார். இதையடுத்து அவர் சென்னை திரும்பி விட்டதாக கூறிய அனைத்து செய்திகளும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.