வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்தார் சூர்யா!

Filed under: சினிமா |

நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள செய்தியால் இயக்குனர் பாலாவுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இயக்குனர் பாலா கடைசியாக இயக்கி வெளியான படம் “நாச்சியார்.” அதன் பிறகு அவர் இயக்கிய “வர்மா” திரைப்படம் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த திரைப்படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு வேறொரு இயக்குனரை வைத்து முழுப்படத்தையும் எடுத்து ரிலீஸ் செய்தனர். இதையடுத்து இயக்குனர் பாலாவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இருந்தது. சூர்யா, பாலா இயக்கத்தில் நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது. ஆனாலும் தொடர்ந்து அதுபோன்ற வதந்திகள் பரவி வந்தது. சூர்யா, இயக்குனர் பாலாவோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து “மீண்டும் படப்பிடிப்புத் தளத்துக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறேன்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.