வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து!

Filed under: இந்தியா |

முதல் முறையாக வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போபாலிலிருந்து டில்லி சென்ற வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ரயிலுள்ள பேட்டரியில் ஏற்பட்ட தீ, ரயிலில் பரவியதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்த தகவல் தெரிந்ததும் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டதாகவும் இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு உள்பட ஒரு சில அசம்பாவிதமான சம்பவங்கள் நடந்திருந்தாலும் முதல் முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.