வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு எப்போது?

Filed under: அரசியல்,தமிழகம் |

வந்தே பாரத் ரயில் சென்னையிலிருந்து நெல்லை இடையே இயக்கப்படுவது எப்போது என்ற தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து மைசூர் மற்றும் சென்னையிலிருந்து கோவை ஆகிய நகரங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து -நெல்லைக்கு இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளது. சென்னையிலிருந்து -நெல்லைக்கு இடையே வந்தே பாரத் ரயில் கடந்த மாதமே தொடங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தண்டவாளம் மேம்பாட்டு பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதால் ஆகஸ்ட் மாத இறுதியில் இயக்கப்பட வாய்ப்பிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே அடுத்த மாதம் சென்னையிலிருந்து -நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.