வரலாற்று திரைப்படமா “வேள்பாரி”?

Filed under: சினிமா |

“வேள்பாரி” திரைப்படமும் “பாகுபலி,” “பொன்னியின் செல்வன்” திரைப்பட வரிசையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை இயக்குனர் ஷங்கர் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. “பாகுபலி” மற்றும் “பொன்னியின் செல்வன்” போன்ற வரலாற்று திரைப்படங்களின் வெற்றியையடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இப்படம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தால் அதில் கதாநாயகனாக கேஜிஎப் படப்புகழ் யாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இத்திரைப்படம் சமீபத்தைய டிரெண்ட்டான “பாகுபலி” மற்றும் “பொன்னியின் செல்வன்” போல 2 பாகங்களாக உருவாக போகிறதாம்.