வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க நிதியமைச்சகம் உத்தரவு !

Filed under: இந்தியா |

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலைமையைக் கருத்தில் கொண்டும், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க வேண்டியும், ரூ. 5 லட்சம் வரையிலான நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரித் தொகை திருப்பிக் கொடுத்தல்களையும் உடனே செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் வரி செலுத்துவோர் இதன் மூலம் பயனடைவார்கள். அனைத்து சரக்கு மற்றும் சேவை வரி, சுங்க திருப்பி கொடுத்தல்களையும் உடனே செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் உட்பட சுமார் 1 லட்சம் தொழில் நிறுவனங்ககுக்கு இது பயன் அளிக்கும். தோராயமாக, ரூ. 18,000 கோடி மொத்த திருப்பி கொடுத்தல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .