வாசனுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை!

Filed under: அரசியல்,இந்தியா |

4தமிழக முதல்வரின் டெல்லி பயணம் மகிழ்ச்சியான வெற்றியை அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதாவை நன்கு அறிந்த பிரதமர்மோடி, பா.ஜ.க. தமிழக எதிர்ப்பு அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பை முறியடித்து உடனடி உதவியில் இறங்கி உள்ளாராம். இது முதல்வர் எதிர்ப்பு பா.ஜ.க. அரசியல்வாதிகளுக்கு நெற்றி அடியாக விழுந்துள்ளது. உடனே அவர்கள் தங்கள் சூழ்ச்சி வலையை பின்ன ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய முதல் திட்டம் காவிரி நீர் பங்கீட்டில் கடும் எதிர்ப்பை கிளப்பி தமிழக உதவிகளை முடக்குவது என்பதுதானாம்.

அடுத்து ஜெயலலிதாவைக்கண்டு தமிழக நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பதுபோல் நடுங்கும் இலங்கை அதிபர் தன்னுடைய இந்திய செல்வாக்கை வலைவிரிக்க ஆரம்பித்து விட்டார். அதனால் இலங்கை விவகாரத்தை ரப்பர்போல் இழுக்க முயற்சி நடக்கும் என்கிறார்கள். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தமிழக முதல்வருடன் விவாதிக்கவும், தமிழக நலன்களை உடனடியாக மேம்படுத்தவும் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளாராம். இது முதல்வரை எதிர்க்கும் பா.ஜ.க. அரசியல்வாதிகளுக்கு எரிச்சலை கிளப்புவதாக கிசுகிசுக்கிறார்கள். தமிழ் உணர்வுகளை தட்டிப்பேசி ஓட்டுகேட்ட தமிழக பா.ஜ.க. கூட்டணி கட்சிகள், உடனடியாக கச்சத்தீவை தமிழகத்துடன் இணைக்க முயற்சி செய்வது, தமிழக மக்களுக்கு செய்கின்ற நன்றிக்கடன் என்று தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

கர்நாடக, சந்திகௌடா, ராமஜோப்ஸ், தமிழக லட்சுமணன், டெல்லி மல்கோத்தரா, ராஜஸ்தான் ஜஸ்வந்த்சிங், தமிழக கோபால்சாமி, உத்தரபிரதேச டாக்டர் முரளிமனோகர் ஜோஷி, முன்னாள் கர்நாடக ஆளுநர் டி.என்.சதுர்வேதி ஐ.ஏ.எஸ். உட்பட பலர் அடுத்த கவர்னர்கள் பட்டியலில் இடம் பெற்று உள்ளார்கள். இதில் கர்நாடகம் புதிய அரசியல் திருப்பத்தை எதிர்நோக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் தேவகௌடாவும், பாஜ.க.வும் இணையும் காலம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் காங்கிரஸ் அரசு உடைந்து கவிழும் அபாயம் ஏற்படும் என்ற கருத்து உலவுகிறது.
காங்கிரசில் தலைமைக்கு எதிராக கருத்துக்கள் தோன்ற ஆரம்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. திக்விஜய்சிங், ராகுல் ஆதரவாளர்கள் ஜெயராம்ரமேஷ், தமிழக சிதம்பரம், கேரள சுயநல அரசியல்வாதிகள் ஒன்றுசேர்ந்து, காங்கிரஸ் வளர்ச்சிக்கு மூடுவிழா நடத்திவிட்டதாக இந்திய காங்கிரஸ் தொண்டர்கள் குமுறுகிறார்கள். ராகுல்காந்தியின் திறமையற்ற அரசியல் நிர்வாகம் ஆட்சியை பறிகொடுத்து தவிக்கிறது. காங்கிரசை உயிர்ப்பிக்கவும், மற்ற எதிர்க்கட்சி அணிகளை இணைக்கவும் பிரியங்கா காந்தியால்தான் முடியும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஆந்திரா இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். காரணம் ரெட்டிகளும், நாயுடுகளும் மாறிமாறி முதல்வர்களாக ஆட்சி செய்து காப்பு, பலிஜா இனத்தவர்களை அடிமைபோல் நடத்திய நிகழ்ச்சிகளை நினைவு கூறுகிறார்கள். தற்போது ஆந்திரம் இரண்டாக பிரிந்து சீமந்தரா ரெட்டிகளுக்கும், நாயுடுகளுக்கும் போட்டியை ஏற்படுத்தும். தெலுங்கானா மாநிலம் தற்போது காப்பு, பலிஜா இனங்களுக்கு உயர்வை ஏற்படுத்தும் என்ற கருத்து உலவுகிறது.
இலங்கையில் நடைபெற்ற கொலைகளை இனப்படுகொலை என்ற தமிழக முதல்வருக்கு வெறிபிடித்த சிங்கள அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதனைக்கண்டிக்க தமிழக எதிர்க்கட்சிகளும், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் – அரசியல்வாதிகள் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. காரணம் தமிழ்குலம் அழிந்தாலும், ஜெயலலிதாவுக்கு நல்லபெயர் வரக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதுதான் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இலங்கை அதிபரின் செல்வாக்கு தமிழக கறைபடிந்த அரசியல்வாதிகளை மயக்கி உள்ளது. அரசியலிலிருந்து தமிழக மக்கள் இவர்களை அப்புறப்படுத்தினாலும், இவர்களுடைய இலங்கைப்பற்று உறுதியானது என்று கிண்டலடிக்கிறார்கள்.

தமிழக காங்கிரசில் முன்னாள் நிதியமைச்சரின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. தலைவர் மூப்பனாரைத்தவிர வேறு எந்த தலைவருக்கும் தமிழக மக்கள் ஆதரவு அளித்தது இல்லை என்ற கருத்து உலவுகிறது. தற்போது வாசனை ஒதுக்க நினைக்கும் காங்கிரஸ் தலைமை, தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சியை அடியோடு அழித்துவிடலாம். அ.தி.மு.க.வின் வளர்ச்சியை இனி எந்த ஒரு தமிழக கட்சியாலும் தடுக்க முடியாது. காரணம் தமிழ் உணர்வுகள் வெற்றிகரமாக எழுப்பப்பட்டு, தமிழர்கள் குறிப்பாக தமிழ்பேசும் மக்கள் புரட்சித்தலைவியுடன் இணைந்து விட்டார்கள் என்பது சுட்டெரிக்கும் உண்மை.