வாடகைதாரர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கும் மின்வாரியம்!

Filed under: தமிழகம் |

மின்வாரியம் ஆதார் எண்ணை இணைத்தால் மின் இணைப்பும் வாடகைதாரரின் பெயருக்கு மாறிவிடுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது.

வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை மின் இணைப்பில் இணைத்தால் அவரது பெயருக்கு மின்இணைப்பு மாறாது. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய முடியும். வீட்டின் உரிமையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே வாடகைவீட்டில் உள்ளவர்கள் மின் இணைப்பில் தங்களது ஆதார் பதிவு செய்து கொள்ள முடியும். வாடகைதாரர் மாறும் போது புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதார் எண்ணை இணைக்கலாம். ஒரு ஆதார் எண்ணை அனைத்து மின் இணைப்புகளுக்கும் இணைக்க முடியும். அதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால் ஆதார் எண்ணை இணைத்து மட்டுமே ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்றும் மின்வாரியத் துறை அறிவித்துள்ளது.