வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய ‘வாத்தி’ திரைப்படம் வரும் 17ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் தனுஷ் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. ‘வாத்தி’ திரைப்படத்தின் டிரெயிலர் பிப்ரவரி 8ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.