“வாத்தி” ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

“வாத்தி” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “வாத்தி.” இப்படம் தமிழில் “வாத்தி”, மற்றும் தெலுங்கில் “சார்” ஆகிய பெயர்களில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்திருப்பது தெரியவருகிறது. மேலும் இப்படம் கல்வி துறையிலுள்ள ஊழல்கள், ஏழை மக்கள் நல்ல கல்வி கற்க முடியாத நிலை ஆகியவற்றை குறித்து அலசி ஆராயப்பட்டுள்ளதாக இருக்கும் என்பது படத்தின் டீசரிலிருந்து தெரியவருகிறது. படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 2ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியிடப்படுவதாக படத்தயாரிப்பு நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.