வானதி சீனிவாசனின் பரபரப்பு பேச்சு!

Filed under: அரசியல் |

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் காங்கிரஸ் ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் காந்தி நடைபயணம் சென்றாலும் எந்த பயனில்லை என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி உள்ளார். இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இன்று தொடங்கும் இந்த நடைபயணம் 150 நாட்கள் கழித்து காஷ்மீரில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நடை பயணம் குறித்து வானதி சீனிவாசன் எம்எல்ஏ “இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தியின் நடை பயணத்தின் மூலம் உயிர் ஊட்ட முடியுமா என முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும் சரி ஓடினாலும் சரி மாரத்தான் செய்தாலும் சரி அது எந்த பயனும் தராது” என்று அவர் வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.