வானதி சீனிவாசனின் பேச்சால் பரபரப்பு!

Filed under: அரசியல் |

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள்தான் என்று கூறியுள்ளார்.

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் மட்டும்தான் தாய்மொழியில் படிக்காத மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையின் முதல் அடிப்படையே தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதுதான். ஆனால், அதனை ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அலுவல் மொழி இந்தி என்பது அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்த விஷயமே தவிர அது பாஜக கொண்டு வந்தது அல்ல. மேலும் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள்தான் என பாஜக கூறி வருகிறது. பாஜக எந்த மொழியையும் கைவிடவில்லை, எந்த மொழியையும் தனியாக ஆதரிக்கவில்லை என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.